#BREAKING :: 37 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தகுதி உயர்வு வழங்கியது தமிழக அரசு...!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் பணியாற்றி வந்த 48  ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணியிடம் மாறுதலும் அதில் 28 அதிகாரிகளுக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்ட நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள 37 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தகுதி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 2007 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த வீர ராகவ் ராவ்,  நந்தகுமார்,  லதா, சுந்தரவல்லி,  சரவணன் வேல்ராஜ்,  சுப்பிரமணியன், தட்சிணாமூர்த்தி, ஆகியோர்களுக்கு மாநில தரம் அளவிலிருந்து  சூப்பர் டைம் அளவுக்கு தகுதி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று கடந்த 2019 பணியில் சேர்ந்த 14 ஐஏஎஸ் அதிகாரிகளில் லதா, பிரவீன் பி நாயர், சங்கர் லால் கமவாத், சுபாத்குமார், அஜய் யாதவ், ரேஷ்மி சித்தார்த், செந்தாமரை, கண்ணன், நடராஜன், சிவஞானம், நிர்மல் ராஜ், எஸ்.ஏ. ராமன், அண்ணாதுரை, சிவனருள், ஆகியோர் தகுதி உயர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளாக உயர்த்தப்பட்டுள்ளனர். 

அதே போன்று மாநில தரத்தில் இருந்த 13 ஐஏஎஸ் அதிகாரிகளை இளம் நிர்வாக தரத்திற்கு உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஜானி டாம் வர்கீஸ், தீபக் ஜேக்கப், கார்த்திகேயன், ஆகாஷ், பிரதீப் குமார், ஜெயசீலன், கிரேஸ் லால்ரின்டிகி, சர்வன் குமார், கற்பகம், அன்னை மேரி ஸ்வர்ணா, விசாகன், குமரவேல் பாண்டியன், பாஸ்கர பாண்டியன் ஆகியோரின் தகுதி உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான ஆணைகளை தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Govt promoted 37 IAS officers


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->