ஜிஎஸ்டி கவுன்சில் ரப்பர் ஸ்டாம்பாக மாறி வருகிறது..!! தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர் குற்றச்சாட்டு..!!
TN minister PTR accused GST Council is turning into a rubber stamp
சென்னையில் இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் சார்பில் இரண்டு நாள் தேசிய ஜிஎஸ்டி கருத்தரங்கம் நேற்று துவங்கியது. இந்த கருத்தரங்கை தமிழகம் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார். இந்த கருத்தரங்கில் 20 மாநிலங்களை சேர்ந்த ஜிஎஸ்டி அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த விழா மேடையில் பேசிய அவர் "ஜிஎஸ்டி வரி விதிப்பை அமல்படுத்துவதில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடக்க வேண்டிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமும் முறையாக நடப்பதில்லை.
ஜிஎஸ்டி கவுன்சில் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் போன்று மாறி உள்ளது. ஜிஎஸ்டி சட்டத்தை அமல்படுத்துவதில் எந்த வித திறமையான செயல்பாடுகளும் இல்லை. என்னிடம் இந்த பொறுப்பை வழங்கினால் நிதி துறை நிபுணர்கள் வழக்கறிஞர்கள் என பல்வேறு துறையைச் சார்ந்த 100 பேரை முழு நேர பணியாளர்களாக அமர்த்தி ஒரே ஆண்டில் ஜிஎஸ்டி கவுன்சில் கட்டமைப்பை மேம்படுத்தி காண்பிப்பேன்.
ஜிஎஸ்டி கவுன்சிலில் வெளிப்படைத்தன்மை கொண்டு வருவேன். ஆனால் அதற்கு சாத்தியம் இல்லை. ஜிஎஸ்டி அனைத்து மாநிலங்களுக்கும் மிகவும் முக்கியமானது. நாட்டின் வருவாயில் 65% வரி ஜிஎஸ்டி வாயிலாகவே கிடைக்கிறது. இதன் காரணமாக ஜிஎஸ்டி கட்டமைப்பில் நிறைய மாற்றங்களை கொண்டு வர வேண்டும்" என பேசி உள்ளார்.
English Summary
TN minister PTR accused GST Council is turning into a rubber stamp