#BREAKING || தமிழகத்தில் மேலும் இத்தனை பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பா? சற்றுமுன் வெளியான அறிவிப்பு.!
TN OMICRON REPORT DEC 28
தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று, தமிழக சுகாதாரத்துறை சற்றுமுன்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, "தமிழகத்தில் 11 பேருக்கு ஒமைக்ரான் நோய் தொற்று உறுதியாகி உள்ளது. இதில், நான்கு பேருக்கு ஆபத்து நிறைந்த நாடுகளில் இருந்து வந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 3 பேர் ஆபத்து குறைவாக உள்ள நாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும், மேலும் 4 பேர் அவர்களின் தொடர்பு மூலம் தோற்று உறுதியானவர்கள் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த பதினோரு பேரில் சென்னையை சேர்ந்தவர்கள் ஏழுபேரும், திருவண்ணாமலை, கன்னியாகுமரி, திருவாரூரை சேர்ந்த நான்கு பேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் 34 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது 11-ம் சேர்த்தால் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் தொடர்ந்து செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 ஆக இருக்கிறது. இதில் 4 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ளவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் 650 க்கும் மேற்பட்டோர் ஒமைக்ரான் நோய்தொற்றுக்கு பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இதில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து டெல்லி, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகமாகி உள்ளது.