#தமிழகம் | கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி - பாஜக நிர்வாகியை தட்டி தூக்கிய போலீசார்!
TN Police arrest Vellore BJP sathish
வேலூர் மாவட்டம் : கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட பாஜக இளைஞரணி மாவட்டத் தலைவர் ரவுடி கிளி என்ற சதீஷை போலீசார் கைது செய்துள்ளார்.
பள்ளிகொண்டா அருகே கந்தனேரி நெடுஞ்சாலை பகுதியில் இளைஞர் ஒருவர் கத்தியைக் காட்டி பணம் பறிப்பதாக பொதுமக்கள் சிலரிடமிருந்து போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த இளைஞரை கையும் களவுமாக பிடித்துள்ளனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் ரவுடி கிளி என்ற சதீஷ் என்பது தெரியவந்துள்ளது
இதனைத் தொடர்ந்து சதீஷ் மீது மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் ஏற்கனவே இவர் மீது கொலை, வழிப்பறி என பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
TN Police arrest Vellore BJP sathish