#BREAKING | 5 நாளில் 11 பேர் பலி! தமிழக மக்களுக்கு வெளியான எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கன மழை காரணமாக தற்போது வரை 11 பேர் உயிரிழந்து உள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை துறை தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த மே 16ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை 11 பேர் கனமழையால் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை, நீலகிரி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் 10 குழுக்கள் உள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை  துறை தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா தளங்களுக்கு பொதுமக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் பேரிடர் மேலாண்மை துறை அறிவுறுத்தி உள்ளது.

இதற்கிடையே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பகல் 1 மணிவரை கனமழை பெய்யும் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை மையம்.

மேலும், கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களிலும் பகல் 1 மணி வரை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுதன் காரணமாக, நாளை (மே 22) தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகிறது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகா்ந்து, மத்திய வங்கக்கடலில் 24- ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இதன் காரணமாக இன்று முதல் மே 24 வரை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யவாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Rain fall flood 11 people death in 5 days


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->