#JUSTIN || ரேஷன் கடைகளில் கியூ.ஆர் கோடு மூலம் உணவுப் பொருட்களை வழங்க ஆணை.!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முக ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு நியாய விலைக் கடைகள் மூலம் அனைத்து பொது மக்களுக்கும் வழங்கப்பட்டு வந்தது.

கடந்த ஜனவரி 3ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. 

பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டால், கியூ.ஆர் கோடு (QR Code) மூலம் ஸ்கேன் செய்து உணவுப் பொருட்களை வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குடும்ப அட்டை எண்ணை விற்பனை நிலையத்தில் பதிவு செய்து, ரேஷன் பொருட்களை வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN RATION SHOP QR CODE


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->