தமிழக மாணவர்கள், ஆசிரியர்கள் கவனத்திற்கு! வெளியான இரு முக்கிய அறிவிப்புகள்!
TN School Education Dept Announce
பள்ளி வேலை நாட்கள் 210 தினங்களாக குறைக்கப்பட்ட திருத்தப்பட்ட கல்வியாண்டு நாட்காட்டியை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளி வேலை நாட்கள், தேர்வுகள், விடுமுறை, ஆசிரியர் பயிற்சி, முகாம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய கல்வியாண்டு நாட்காட்டி வருடந்தோறும் பள்ளிக் கல்வித் துறையால் வெளியிடப்பட்டு வருகிறது.
கடந்த ஜூன் 8-ம் தேதி நடப்பு 2024-25 கல்வியாண்டுக்கான நாட்காட்டியை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டது.
அதில், 19 சனிக்கிழமை உட்பட 220 தினங்கள் பள்ளி வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டன. வேலை நாட்களை குறைக்க வேண்டும் என பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கையை ஏற்று, 210 தினங்களாக குறைக்கப்பட்டது.
இந்நிலையில், திருத்தப்பட்ட கல்வியாண்டு நாட்காட்டியை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
இதில், 4 சனிக்கிழமைகளில் மட்டுமே வகுப்புகள் (2 சனிக்கிழமைகளில் வகுப்புகள் முடிந்துவிட்டன) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
10, 11, 12-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு தேதி:
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அக்டோபர் 14-ம் தேதி வெளியிட உள்ளதாக தேர்வுத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
English Summary
TN School Education Dept Announce