ஒரே தேர்வு! ஒரே வினாத்தாள்! மத்திய அரசை பின்பற்றும் தமிழக அரசு! - Seithipunal
Seithipunal


6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு காலாண்டு, அரையாண்டு மற்றும் திருப்புதல் தேர்வுகள் அந்தந்த பள்ளிகள் மற்றும் மாவட்ட அளவில் வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான பொது வினாத்தாள் நடைமுறையை கொண்டுவர பள்ளிக்கல்வித்துறை நடவடி மேற்கொண்டுள்ளது.

நடப்பு கல்வியாண்டில் (2023-24) இதனை அமல்படுத்தும் விதமாக வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள காலாண்டு தேர்வை நடத்தவும் பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

அதே சமயத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான வினாத்தாள் பழைய நடைமுறையில்தான் இருக்கும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்த விரிவான விளக்கத்தில், தமிழ்நாடு மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுக்கு (டி.என்.எஸ்.சி.இ.ஆர்.டி.) வரும் பொது வினாத்தாள்கள், மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN School Education one question pattern


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->