இனி மின் மீட்டருக்கு வாடகை.!! மக்களுக்கு ஷாக் வைக்கும் மின்வாரியம்.!! அனுமதிக்குமா தமிழக அரசு.? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 8 ஆண்டுகளாக உயர்த்தப்படாத மின்சார கட்டணம் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு உயர்த்தப்பட்டது. இதனால் பல்வேறு தரப்பட்ட மக்களும், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களும், பெரிய நிறுவனங்களும் கடுமையாக பாதிப்புக்கு ஆளாகின.  இதற்கு அப்போதைய மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மத்திய அரசின் அழுத்தம் காரணமாக மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் வீடுகளில் மின்‌ பயன்பாட்டை அளவிடப்‌ பயன்படும்‌ மின்‌ மீட்டருக்கு மாதந்தோறும்‌ ரூ.60 கட்டணம் என்ற அடிப்படையில் இரண்டு மாதத்துக்கு ஒரு முறை ரூ.120 மின்‌ மீட்டருக்கான வாடகையாக வசூலிக்க தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம்‌ மின்சார வாரியம்‌ அனுமதி கேட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்தப் பரிந்துரைக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கினால்  வரும் செப்டம்பர்‌ மாதம்‌ முதல்‌ 2 மாதத்துக்கு ஒரு முறை ரூ.120 மின்‌ மீட்டருக்கான வாடகையாக ஏழை எளிய மக்கள் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.

இந்த கட்டணமானது டிஜிட்டல்‌ மீட்டர்களுக்கு மட்டுமே பொருந்தும்‌ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஸ்மார்ட் மின் மீட்டர்களைப் பொருத்த மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் அதற்கு மாத வாடகையாக ரூ.350 வசூலிக்கவும்‌ திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வாடிக்கையாளர்களை தங்களது மின் மீட்டரை சொந்தப் பணத்தில் விலைக் கொடுத்து வாங்கி இருந்தால் வாடகை கட்டணம் வசூலிக்கப்படாது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் மின் மீட்டரை கூட கட்டணம் கொடுத்து வாங்க முடியாத ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

மேலும் மின் மீட்டர்களை சேதம் அல்லது வேறு காரணகளுக்காக மாற்றினாலும், ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு மாற்றினாலும் அதற்காக வசூலிக்கப்படும் பணிகளுக்கான கட்டணத்தை 2 மடங்காக உயர்த்திக்‌ கொள்ளவும்‌ தமிழ்நாடு மின்‌ வாரியம்‌ அனுமதி கேட்டுள்ளதாக கூறப்படுவதால் கூடிய விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNEB ask to TNgovt permit to charge rent for electricity meter


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->