மின் இணைப்புடன் ஆதார் இணைப்பில் குளறுபடி... அதிகாரிகளுக்கு புதிய உத்தரவு..!! - Seithipunal
Seithipunal


மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அதில் நிறைய குளறுபடிகள் நடந்துள்ளது தமிழ்நாடு மின்வாரியம் கண்டறிந்துள்ளது.

இதன் காரணமாக மின்வாரியம் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. அதன்படி வீட்டின் உரிமையாளர், குத்தகைதாரர் மற்றும் இணை உரிமையாளர்களுக்கு தெரியமாலே ஆதார் எண் இணைக்கப்பட்டதை மின்வாரியம் கண்டறிந்துள்ளது.

ஆதார் எண் இணைப்பு முழுவீச்சில் நடைபெறுவதாக காட்டுவதற்காக அதிக அளவில் நுகர்வோருக்கு தொடர்பில்லாத ஆதார் எண் இணைத்துள்ளது.  சம்பந்தப்பட்ட நபர்களின் ஆதார் எண் மட்டுமே மின் இணைப்புடன் இணைக்கப்பட வேண்டும் எனவும் இதனை மின்வாரிய ஊழியர்கள் தான் உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இது போன்ற செயல்களால் தமிழக அரசின் திட்டத்திற்கான நோக்கமே வீணாகியுள்ளது என மின் வாரியம் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. மேலும் உயர் அதிகாரிகள் இதற்கு தனிக்கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNEB ordered on Aadhar link problem with electricity connection


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->