ஒரு டிக்கெட்டுக்கு 100 ரூபாய் வரை உயர்வு! தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


அரசு விரைவு போக்குவரத்து பேருந்துகளில், வார நாட்களில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த கட்டண சலுகை நீக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வரும் ஜூன் 15 வரை அரசு விரைவு பேருந்துகளில் இந்த கட்டணச் சலுகை கிடையாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

"அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் கோடை விடுமுறை முழுவதும் லீன் (வார நாட்களில் 10% கட்டண சலுகை) கட்டண முறை நீக்கம் செய்யப்படுகிறது. 

அரசு விரைவு போக்குவரத்து பேருந்துகளில், வார நாட்களில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த கட்டண சலுகையும் நீக்கம் செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம் ஒரு டிக்கெட்டுக்கும் ரூ.50 முதல் ரூ.150 வரை  பயணிகள் கூடுதலாககட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. 

கோடை விடுமுறை நாட்களில் அரசு பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும். இதனை கணக்கில் வைத்து வருவாய் ஈட்ட போக்குவரத்து கழகம் இப்படியான முடிவை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNGovt Bus Ticket Rate hike April 2023


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->