இனி தப்பவே முடியாது.. காலை 7:30 மணிக்கே பணிக்கு வரணும்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது மாஹிர் என்ற பச்சிளம் குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சியப் போக்கு காரணம் என குழந்தையின் தாய் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குழந்தை குறை பிரசவத்தில் பிறந்ததும் இதற்கு காரணம் என சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த குழந்தையின் தாய் அஜிஷா "என் குழந்தைக்கு தமிழ்நாடு அரசு நீதி சொல்ல வேண்டும். அரசு மருத்துவர்கள் செவிலியர்களை காப்பாற்றும் வகையில் அமைச்சர் நடந்து கொள்கிறார். என் குழந்தை அரசு மருத்துவர்கள் அலட்சியத்தால் கை எழுந்து உள்ளதே என மன வேதனை இருக்கிறேன். ஆனால் அமைச்சர் மா சுப்பிரமணியன் மனசாட்சி இல்லாமல் நீங்கள் யாரோ சொல்லி தான் இப்படி பேசுகிறீர்கள் எனக்கு கூறுவது மனவேதனை அடைகிறது" என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சியப் போக்கால் குழந்தையின் வலது கை அகற்ற காரணம் என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சுகாதாரத் துறை செயலாளர் அரசு மருத்துவமனைகளுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதில்,

அரசு மருத்துவமனை :

1) புற நோயாளிகளை சந்திக்கும் மருத்துவர்கள் காலை 7:30 மணி முதல் மதியம் 12:00 மணி வரை கட்டாயம் பணியில் இருக்க வேண்டும்.

2) மற்ற மருத்துவர்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பணியில் இருக்க வேண்டும். மருத்துவமனை அதிகாரிகள்  காலை 7:00 மணி முதல் புற நோயாளிகளை கண்காணித்து அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

3) அரசு மருத்துவமனையின் கண்காணிப்பாளர் காலை 8 மணி முதல் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் இருக்க வேண்டும்.

அரசு தலைமை மருத்துவமனை:

1) காலையில் புற நோயாளிகளை காலை 7:30 மணி முதல் மதியம் 12:00 மணி வரையும், 24 மணி நேர பணியோடு மாலை 3:00 மணி முதல் 5:00 மணி வரை பணியில் இருக்க வேண்டும்.

2) பல் மருத்துவர்கள் மற்றும் பிசியோதெரபிஸ்ட் புற நோயாளிகளை காலை 8 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரையும் மாலை 3 மணி முதல் 5 மணி வரையும் பணியில் இருக்க வேண்டும்.

3) தலைமை மருத்துவ அதிகாரி காலை 7:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரையும் பிற்பகல் 3:00 மணி முதல் மாலை 5:00 மணி வரையும் கட்டாயம் பணியில் இருக்க வேண்டும்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்:

1) 3 மருத்துவ அதிகாரிகள் கொண்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் புற நோயாளிகளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பார்க்க வேண்டும்.

2) 5 மருத்துவ அதிகாரிகள் கொண்டு 24 மணி நேரமும் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2 மருத்துவ அதிகாரிகள் கொண்ட குழு காலை 8:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரையும், ஒரு மருத்துவ அதிகாரிகள் கொண்ட குழு  பிற்பகல் 2:00 மணி முதல் மறுநாள் காலை 8:00 மணி வரையும் கட்டாயம் பணியில் இருக்க வேண்டும் என சுகாதாரத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNgovt has released new timings for govt doctors


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->