மூத்த குடிமக்கள், பெற்றோர்கள் பாதுகாப்பு வழக்கு.. தமிழக அரசின் முக்கிய தகவல்.!! - Seithipunal
Seithipunal


பெற்றோர், மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.குமார் என்பவர் தாக்கல் செய்த மனு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மூத்த குடிமக்களின் நலனை பாதுகாக்கும் வகையில் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அந்த வகையில் ஒவ்வொரு காவல் நிலையமும் அவர்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மூத்த குடிமக்களின் விவரத்தை சேகரித்து வைக்க வேண்டும் எனவும், அவர்கள் ஏதேனும் புகாரளித்தால் அதற்கு முன்னுரிமை கொடுத்து, அதனை தீர்த்து வைக்க வேண்டும் எனவும் தமிழக டிஜிபி சுற்றறிக்கை பிறப்பித்துள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

மூத்த குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் சிவகுமார் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNgovt important info about senior citizen safety


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->