ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில்வே திட்டத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு.!! - Seithipunal
Seithipunal


தென்னிந்தியாவின் வணிக மையமாக திகழ்ந்த தனுஷ்கோடி ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய புயலிலால் கடுமையாக பாதிக்கப்பட்டதால் அதன் வடுக்கள் மட்டுமே தற்போது மிஞ்சியுள்ளது. கடந்த 1964 டிசம்பர் 23ம் தேதி வங்கக்கடலில் உருவான புயல் தனுஷ்கோடியை தாக்கியதில் கடலில் பொங்கி எழுந்த பேரலையால் தனுஷ்கோடியில் வாழ்ந்த ஒரு சிலரை தவிர ஆயிரக்கணக்காணோர் உயிரிழந்தனர்.

அப்போது ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு சென்ற ரயில் கடலில் விழுந்து மூழ்கியது. மேலும் ரயில் பாதைகளும் முழுமையாக சேதமடைந்ததால் ரயில் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரம் தனுஷ்கோடி புதிய ரயில் பாதை திட்டத்தை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மத்திய அரசு நிதி ஒதுக்கியதால் தற்பொழுது ரயில் பாதை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ராமேஸ்வரம் தனுஷ்கோடி இடையிலான ரயில்வே திட்டத்தை கைவிட வேண்டும் என தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மாநிலங்களவை உறுப்பினர் அகிலேஷ் பிரசாத் சிங்கின் கேள்விக்கு பதில் அளித்த அவர் தனுஷ்கோடி பகுதி சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்வதால் ரயில் திட்டத்தை கைவிடுமாறு தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது. இந்த திட்டத்திற்கான முதற்கட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNgovt opposes Rameswaram Dhanushkodi railway project


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->