டபுள் மடங்கு உதவித்தொகை! மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு! அதிரடி அரசாணை! - Seithipunal
Seithipunal


மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையை உயர்த்தி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. 

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித் தொகையை இரு மடங்காக உயர்த்தி தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இதன் மூலம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகை உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்த தமிழக அரசின் அரசாணையில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை 2000 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. 

மேலும் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகையாக 3000 ரூபாயில் இருந்து 6000 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.


 
பட்டப் படிப்பு படிக்கக்கூடிய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 6000 ரூபாயில் இருந்து, ரூபாய் 12000 ஆக உதவித்தொகை உயர்த்தி வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

மேலும், ஆராய்ச்சி படிப்பில் ஈடுபடும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் விதம் 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNGOVT Order for Physically Challenged Student Help Fund increased in double time


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->