அடுத்த அதிரடி... பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் ஆதார் எண் இணைக்க உத்தரவு..!!
Tngovt order to link Aadhar to girl child protection scheme
தமிழக முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயனாளர்கள் அனைவரும் தங்களது ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என தமிழக அரசு உத்தரவிட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அரசாணையில் கூறியதாவது "சமூக நலத்துறை சார்பில் முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைகளின் பெயரில் ரூ.50 ஆயிரம் வைப்பு நிதியாக தமிழ்நாடு மின் விசை நிதி நிறுவனத்தில் வைக்கப்படுகிறது. இந்த வைப்பு நிதிக்கான ஆவணம் பெண் குழந்தையின் பெற்றோரிடம் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் மத்திய அரசின் விதிகள் படி திட்ட பயனாளிகள் ஆதார் எண் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த திட்டத்தின் கீழ் வரும் பயனாளர்கள் ஆதார் எண்ணை அடையாள ஆவண சமர்ப்பிக்க வேண்டும். இதுவரை ஆதார் எண் பெறாத பெண் குழந்தைகள் பெற்றோரும் மூலம் விண்ணப்பித்து அதனை கொண்டு இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விண்ணப்பிக்க வேண்டும்.
ஆதார் அடையாள அட்டை விண்ணப்பித்து காத்திருக்கும் பயனாளர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஆதார் விண்ணப்பித்த போது வழங்கப்பட்ட ஆவணம் அல்லது ஆதார் பெற்றதற்கான விண்ணப்ப நகல் ஆகியவற்றை இணைக்கலாம். அத்துடன் புகைப்படத்துடன் கூடிய வங்கி கணக்கு புத்தகம் நகல், நிரந்தர வங்கி கணக்கு அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி அட்டை, புகைப்படத்துடன் கூடிய கிசான் சேமிப்பு கணக்கு புத்தகம், ஓட்டுநர் உரிமம் ஆகிய புகைப்படத்துடன் கூடிய சான்றிதழ்கள் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு சான்றிதழ் ஆகியவற்றை கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்" என அறிவிக்கப்பட்டுள்ளது
English Summary
Tngovt order to link Aadhar to girl child protection scheme