மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி.. யாருக்கெல்லாம் கட்டாயம்..? தமிழக அரசு அதிரடி உத்தரவு..! - Seithipunal
Seithipunal


சூடான் நாட்டில் இருந்து ஆபரேஷன் காவிரி திட்டம் வாயிலாக நாடு திரும்பி அவர்கள் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசியை செலுத்தி இருக்கிறார்களா..? என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என தமிழகத்தில் உள்ள அனைத்து விமான விமான நிலையங்களுக்கும் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் மஞ்சள் காய்ச்சல் பரவி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா நாடுகளில் மஞ்சள் காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகிறது. இதனால் இந்த இரு நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வ விநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சூடான் நாட்டில் நிலவக்கூடிய அசாதாரண சூழல் காரணமாக ஆபரேஷன் காவேரி திட்டம் வாயிலாக மீட்கப்பட்ட இந்தியர்கள் தற்பொழுது நாடு திரும்பி இருக்கக்கூடிய நிலையில் அனைவரும் மஞ்சள் காய்ச்சல் தடுப்பு ஊசி செலுத்தி உள்ளார்களா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் 

இது தொடர்பான தரவுகளை பொது சுகாதாரத் துறைக்கு வழங்க வேண்டும் எனவும் தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தாத பயணிகள் ஆறு நாட்கள் தனிமைப்படுத்தப்பட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா நாடுகளுக்கு செல்லும் மற்றும் திரும்பி வரும் அனைத்து பயணிகளும் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் குடியுரிமை பெற்று ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா நாடுகளில் பயணம் செய்ய விரும்புவோர் மூன்று இடங்களை தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் இரு இடங்களிலும், தூத்துக்குடியிலும் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNgovt order Yellow fever vaccine mandatory for african and south american travelers


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->