#BREAKING:: இனி "திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மது அருந்தலாம்".. தமிழக அரசு அனுமதி..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு முழுவதும் மது விற்பனையை தமிழ்நாடு மாநில வாணிப கழகம் எனும் டாஸ்மாக் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி தமிழக முழுவதும் அரசு சார்பில் 5,329 சில்லரை விற்பனை கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகள் மூலம் உள்நாடு மற்றும் வெளிநாடு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் நடப்பு 2022-2023 நிதியாண்டில் டாஸ்மாக் விற்பனை மூலம் ரூ.44 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கொள்கை விளக்க குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி கடந்த 20 ஆண்டுகளில் தமிழக அரசுக்கு டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருவாய் சுமார் 12 மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 2021-2022 நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் தமிழக அரசுக்கு ரூ.36,050 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. நடப்பு நிதி ஆண்டில் 44,098 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

இது கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.8000 கோடி கூடுதலாக வருவாய் கிடைத்துள்ளது. மேலும் அடுத்த நிதியாண்டில் 50,000 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக் மூலம் மதுபானம் விற்பனை செய்ய வேண்டும் என தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதனால் தமிழக அரசு மது விற்பனை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி தமிழக முழுவதும் தற்பொழுது பொது இடங்களில் மது அருந்துவது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானங்களை பயன்படுத்த அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது.

மாவட்ட ஆட்சியரின் அனுமதியோடு, மதுவிலக்குத்துறை சிறப்பு அனுமதி வழங்கலாம் என புதிய சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மது அருந்த நிர்ணயிக்கப்பட்ட கட்டண விவரங்களோடு அரசிதழை உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ளார். தமிழக அரசின் இத்தகைய முடிவு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNgovt permits alcohol consumption in wedding halls and sports grounds


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->