தமிழக அரசின் திட்டங்களை சொல்லும் வாட்ஸ் அப் பாட்... முழு விவரம் இதோ..!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் சார்பாக பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் அந்த திட்டங்கள் தொடர்பான விவரங்கள் மற்றும் பயன்கள் பற்றி பலருக்கு தெரியவில்லை. இதனால் தகுதி உள்ள பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் சென்றடைவதில்லை. இதனைக் கருத்தில் கொண்டு தமிழக முழுவதும் உள்ள பொதுமக்கள் அரசின் நலத்திட்டங்கள் குறித்து தகவல் அறியும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி "மக்கள் நலன் பாட்" எனும் பெயரில்  பொதுமக்கள் தங்கள் ஸ்மார்ட் போனில் உள்ள வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு திட்டங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம். அதற்காக பிரத்தியேக செல்போன் எண்ணும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முதலில் பொதுமக்கள் தங்கள் செல்போனில் மக்கள் நலன் பாட் திட்ட எண்ணான "9944587994" என்ற எண்ணை பதிவு செய்து கொள்ள வேண்டும். 

பிறகு தங்கள் வாட்ஸ் அப் எண்ணில் இருந்து "HI" என மெசேஜ் அனுப்ப வேண்டும்.

அதற்கு அடுத்தபடியாக உங்களின் முழு விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

பயனாளர்கள் தேர்ந்தெடுக்கும் வகையைப் பொறுத்து சம்பந்தப்பட்ட துறையில் உள்ள நலத்திட்டங்கள் உங்கள் திரையில் காண்பிக்கப்படும். 

அதனை கிளிக் செய்து பயனாளர்கள் முழு விவரத்தையும் தெரிந்து கொள்ளலாம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNGovt Schemes details in WhatsApp bot


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->