குட் நியூஸ்.. முன்பண உச்சவரம்பு ரூ.50 இலட்சமாக உயர்வு.. அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கும் கட்டிய அல்லது அடுக்குமாடி குடியிருப்பு வாங்குவதற்கும் தமிழக அரசு முன் பணம் வழங்கி வருகிறது. இந்த முன்பணமானது நான்கு ஆண்டுகள் முறையான பணி நிறைவு மற்றும் நுழைவு பதவிகளில் தகுதியின் அடிப்படையில் அரசு பணியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அவ்வாறு அரசு ஊழியர்களின் ஊதிய தகுதிக்கு ஏற்ப 40 லட்சம் முன்பணம் கடனாக வழங்கப்படுகிறது.

இந்த முன்பணத்தில் 50 சதவீதம் வீட்டுமனை வாங்குவதற்கும், மீதமுள்ள 50 சதவீதம் வீடு கட்டவும் வழங்கப்படுகிறது. அதேபோன்று கட்டப்பட்ட வீட்டை மேம்படுத்தவும் விரிவாக்கம் மேற்கொள்ளவும் கடன் தொகையில் தகுதியுள்ள முன்பனத்தில் 50 சதவீத வரம்பிற்குட்பட்டு அனுமதிக்கப்படுகிறது. 

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் பொழுது உயர்ந்து வரும் கட்டுமான செலவுகளை கருத்தில் கொண்டு அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் வீடு கட்டும் முன் பணம் 40 லட்சத்திலிருந்து 50 லட்சமாக நடப்பு நிதியாண்டில் இருந்து உயர்த்தி வழங்கப்படும் என வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி அரசு ஊழியர்களுக்கு வீடு கட்ட வழங்கப்படும் முன்பன உற்சவரம்பு 40 லட்சத்திலிருந்து 50 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNGt has increased advance payment limit for govt staffs


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->