சவுக்கு சங்கர் உட்பட 17 பேர் மீது வழக்கு பதிவு.!! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ள சென்னையின் இரண்டாவது பசுமை வழி விமான நிலையத்திற்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழு சார்பில் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் கலந்து கொள்ள சென்றார்.

அப்போது அவரை தடுத்து நிறுத்திய போலீசார் போராட்டத்தில் ஈடுபட அனுமதிக்க முடியாத என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனை மீறி சவுக்கு சங்கர் போராட்டத்தில் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

இந்த நிலையில் போலீசாரின் தடையை மீறி போராட்டத்தில் கலந்து கொண்ட சவுக்கு சங்கர் உட்பட 17 பேர் மீது கலவரத்தை விளைவித்தல் என 147 வது பிரிவு, அவதூறு பரப்பியதாக 294 பி பிரிவு, கொலை மிரட்டல் வீட்டுத்தாக 561 (1) பிரிவு, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக 353 வது பிரிவுகளின் கீழ் சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tnpolice filed case against savukku Sankar including 17 people


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->