மொத்தம் 105 காலி பணியிடங்கள்! டிஎன்பிஎஸ்சி தொழில்நுட்ப பணிக்கான அறிவிப்பை வெளியீடு! - Seithipunal
Seithipunal


டிஎன்பிஎஸ்சி சார்பில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 105 பணியிடங்களுக்கான தேர்வுக்கான அறிவிப்பாணையை டிஎன்பிஎஸ்சி தற்போது வெளியிட்டுள்ளது. இணைய வழி விண்ணப்பத்தை வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் டிஎன்பிஎஸ்சிஅறிவித்துள்ளது.

நேர்காணல் அல்லாத ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகளுக்கான பணியிடங்களுக்கு விண்ணப்பப் பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், 105 இடங்களுக்கு நேர்காணல் கொண்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகளுக்கான பணியிடங்களுக்கு விண்ணப்பப் பதிவு இன்று தொடங்குவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

செப்டம்பர் 29ஆம் தேதி வரை இதற்காக விண்ணப்பிக்கலாம். வரும் அக்டோபர் 2 முதல் 4ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம்.

தகுதி : நேர்காணல் அல்லாத பணியிடங்களுக்கான தகுதியாக டிப்ளமோ, ஐடிஐ தரத்திலான படிப்புகள்

பணியிடம் : மேலாளர், துணை மேலாளர் உள்ளிட்ட மேலாண்மை ரீதியிலான பணியிடங்கள்

மேலும் விவரங்களுக்கு https://www.tnpsc.gov.in/Document/english/CTSE%20INTERVIEW%20POSTS-ENGLISH_.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNPSC announce 30 08 2024


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->