தமிழகத்தில் 18  மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம் தகவல்.! - Seithipunal
Seithipunal


கடந்த மாதம் முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக, குமரி கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

அதே சமயம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, உள்ளிட்ட 18 மாவட்டங்கள் மட்டுமல்லாமல், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதையடுத்து, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளையும், நாளை மறுதினமும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பொழியவும் வாய்ப்புள்ளது. அதன் பின்னர் வருகிற 9-ந் தேதியன்று வங்க கடல் பகுதியையொட்டி உள்ள இலங்கை பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகி அடுத்த இரண்டு நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி வடமேற்கு திசையில் நகர உள்ளது. இதன் காரணமாகவும் மிதமான மழை முதல் கனமழை பெய்வதற்கான சூழல் அதிகமாக உள்ளது. 

இந்நிலையில், நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவு பெற்ற  24 மணி நேரத்தில் தமிழகத்தில் கோடியக்கரை, ராமேஸ்வரம், கொட்டாரம், குலசேகரப்பட்டினம், வேளாங்கண்ணி, வத்திராயிருப்பு, சிவகிரி, பெருஞ்சாணி அணை, முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் செண்டிமீட்டர் கணக்கில் மழை பெய்துள்ளது. 

மேலும் வைப்பார், பிலவக்கல், புத்தன் அணை, சேரன்மகாதேவி, பேச்சிப்பாறை, மேட்டுப்பாளையம், வெம்பக்கோட்டை, தாராபுரம், தென்காசி, சங்கரன்கோவில், நாகப்பட்டினம், பாம்பன் தலா 5 செ.மீ., இதைத்தொடர்ந்து, ராமநாதபுரம், தஞ்சை பாபநாசம், ராஜபாளையம், தக்கலை, காட்டுமயிலூர், ஊத்துக்குளி, ஆயிக்குடி, செய்யார், வேடசந்தூர், மணிமுத்தாறு, உள்ளிட்ட பகுதிகளில் தலா 4 செ.மீ. என்று பல இடங்களில் மழை பெய்திருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

toady eighteen district heavy rain alart in tamilnadu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->