சென்னை போரூரில் முக்கிய திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் மு க ஸ்டாலின்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதலில் சுகாதாரத் துறை பணியாளர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன்பிறகு 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. பல கட்டங்களாக செயல்பட்ட தடுப்பூசி திட்டத்தில் தற்போது 18 வயதான அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 

இந்நிலையில், இந்தியாவில் அதிகரித்து வரும் ஒமைக்ரான் காரணமாக நாடு முழுவதும் 15 முதல் 18 வயது வரையிலான சிறுவர், சிறுமிகளுக்கு தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்குகிறது. பிரதமர் நரேந்திர மோடி கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது ஒமைக்ரான் பரவலை தடுக்க 15 முதல் 18 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 3ஆம் தேதி தொடங்கும் என அறிவித்து இருந்தார். 

அதன்படி இன்று 15 முதல் 18 வயது வயதான சிறுவர்-சிறுமிகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது. 15 முதல் 18 வயது உடையவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. தடுப்பூசி செலுத்தி 30 நிமிடங்கள் கண்காணிப்பில் வைத்து பின்னரே அனுப்பி வைப்பார்கள். 28 நாட்களுக்குப் பிறகு இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்படும். 

இந்நிலையில், தமிழகத்தில் 15 முதல் 18 வயது உடையவர்கள் தடுப்பூசி போடும் திட்டத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று போரூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைக்கிறார். மாவட்டங்களிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் முன்னிலை வைத்து இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today corona vaccine for boys and girls


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->