ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை... சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?  - Seithipunal
Seithipunal



தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் நேற்று சவரனுக்கு ரூ. 360 உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. 

அதன்படி சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்ந்து ரூ. 55,360 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ. 90 உயர்ந்து ரூ. 6920க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து ரூ. 100.50 க்கும் ஒரு கிலோ பார் வெள்ளி ரூ. 1 லட்சத்து 500க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த எட்டாம் தேதியில் இருந்து சவரன் 54 ஆயிரத்தில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 55 ஆயிரத்தை தாண்டி உள்ளது நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today gold price 17072024


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->