அமைச்சர்களுக்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கு - உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு.!
today hearing ministers property case in chennai high court
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2006-2011 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக தங்கம் தென்னரசு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் மீதும் இரண்டு தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்கின் மேல் விசாரணை நடத்தி லஞ்ச ஒழிப்புத் துறையினர் தாக்கல் செய்த அறிக்கைகளின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்து சிறப்பு நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்திருந்தன.
இந்த உத்தரவுகளை மறு ஆய்வு செய்யும் வகையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். அதன் படி, இந்த வழக்கின் இறுதி விசாரணை கடந்த மார்ச் மாதம் துவங்கியது.
இந்த வழக்குகளில் அமைச்சர்கள் தரப்பிலும், லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்ததையடுத்து, இந்த மூன்று வழக்குகளின் தீர்ப்பை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.
இந்த நிலையில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்குகளில் இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பளிக்க உள்ளார். இதில் அவர்கள் விடுவிக்கப்படுவார்களா? என்பது தெரியவில்லை.
English Summary
today hearing ministers property case in chennai high court