செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? - இன்று வெளியாகும் அதிரடி முடிவு.!
today hearing of senthil balaji case in supreme court
தமிழக மின்சார துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜிக்குச் சொந்தமான இடங்களில் கடந்தாண்டு மே மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், ஜூன் மாதம் அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
அவரது வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், அவர் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இதுவரை அவர் ஜாமீன் கோரி பல மனுக்களைத் தாக்கல் செய்திருப்பினும், அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.
இதையடுத்து, செந்தில் பாலாஜி கடந்த மாதம் தனது அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்து விட்டு, மீண்டும் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த நிலையில், அவரது ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இந்த வழக்கின் முடிவில் அவருக்கு ஜாமீன் கிடைக்குமா..? என்பது தெரியவரும். அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததால் அவருக்கு ஜாமீன் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
today hearing of senthil balaji case in supreme court