#TamilsAreNotHindus : தமிழர்கள் இந்துக்கள் இல்லை ட்விட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்.! - Seithipunal
Seithipunal


தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

சமீபத்தில் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகியது. இந்த படம் வெளியானதிலிருந்து அதில் வரும் கதாபாத்திரங்கள் குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன.

இது குறித்து சமீபத்தில் பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் பேசிய கருத்து சர்ச்சையாகி இருக்கிறது.

அதில் அவர், "ராஜராஜ சோழனை இந்து என்று கூறுவது தவறானது. ராஜ ராஜ சோழன் இந்து இல்லை என்றும் வரலாறு மாற்றி திணிக்கப்படுகிறது" என்று பேசி இருந்தார். இதை கேட்ட பலரும் அவர் இந்து தான். அதனால் தான் அவர் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் கட்டி இருக்கிறார். எப்படி அவரை இன்று இல்லை என்று கூற முடியும் என்று பேசி வருகின்றனர். 

இதனையடுத்து தற்போது ராஜராஜசோழன் எந்த மதத்தை சார்ந்தவர். அவரின் வழிபாடு என்ன என்பது குறித்து பெரும் விவாதமே நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது இவருடைய கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், காமெடி நடிகர் கருணாஸ் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

வெற்றிமாறனின் கருத்துக்கு இந்து அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புகளை தெரிவித்து ராஜராஜசோழன் இந்து அரசர் தான் என கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் ட்விட்டரில் தமிழர்கள் இந்துக்கள் இல்லை #TamilsAreNotHindus என்ற ஹாஸ்டேக் இந்திய அளவில் ட்ரண்டாகி வருகிறது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today india trending Tamils are not Hindus


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->