இன்று வெளியாக போகும் தீர்ப்பு.. உச்சகட்ட பரபரப்பில் அதிமுகவினர்.!!
today judgment for veda nilayam
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் வகையில் முந்தைய அதிமுக அரசு வேதா கையகப்படுத்துவது தொடர்பாக உத்தரவு பிறப்பித்தது. அமேலும், வேதா நிலையத்திற்கு இழப்பீடாக 60 கோடியே 9 லட்சம் ரூபாயும் நீதிமன்றத்தில் செலுத்தியது.
இருந்தபோதிலும், இழப்பீடு நிர்ணயத்தைம், வேதா நிலையத்தை கைப்படுத்துவதை எதிர்த்தும், இழப்பீடு நிர்ணயித்ததை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தீபா, தீபக் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி, ஏற்கவே நினைவிடம் உள்ள நிலையில் நினைவு இல்லம் அமைப்பது அரசு பணத்தை வீணடிக்கும் செயல் என கூறிய வேதா நிலையத்தை கையகப்படுத்திய நடவடிக்கை ரத்து செய்து நவம்பர் 24ஆம் தேதி தீர்ப்பளித்தது.
இதையடுத்து, அதிமுக சார்பில் உடனடியாக உயர்நீதிமன்றத்தில் அன்றைய தினம் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த 20ஆம் தேதி முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், அதிமுக தரப்பில் பல்வேறு வாதங்கள் முன் வைக்கப்பட்டது. தற்போது வழக்கு விசாரணை நிறைவுற்ற நிலையில் வேதா இல்லத்தை கையகப்படுத்திய உத்தரவு ரத்துக்கு எதிராக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்தின் மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. இதனால் அதிமுகவினர் உச்ச கட்ட பரபரப்பில் உள்ளனர்.
English Summary
today judgment for veda nilayam