தனியார் பள்ளிகளில் இலவச கல்வி - விண்ணப்பிக்க கடைசி நாள் எப்போது? - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் உள்ள சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009-ன் கீழ், வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீத ஒதுக்கீட்டில் 85 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களுக்கு மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டு வருகிறது. 

இங்கு சேரும் மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும். அந்த வகையில், 2024-25-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 22-ந்தேதி தொடங்கியது. இதுவரை 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு பெற விண்ணப்பித்துள்ளனர். 

இந்த நிலையில், ஆர்.டி.இ. சட்டத்தின் கீழ் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. அதனால், விருப்பமுள்ள பெற்றோர்கள் https://rteadmission.tnschools.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today last date apply free compulsory education system


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->