துணைக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் - யாருக்கு? எப்போது? - Seithipunal
Seithipunal


துணைக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் - யாருக்கு? எப்போது?

தமிழகத்தில் நடப்பாண்டுக்கான பொறியியல்‌ மாணவர் சேர்க்கை பொதுக்‌ கலந்தாய்வு மூலம் நடத்தப்பட்டது. அதன்  முடிவில்‌ நிரப்பப்படாமல்‌ உள்ள இடங்களுக்கு, பன்னிரெண்டாம் வகுப்பு பொது மற்றும்‌ தொழிற்‌பயிற்சி படித்து சிறப்பு துணைத் தேர்வில்‌ தேர்ச்சி பெற்ற தகுதிவாய்ந்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும்‌ 2023 பொதுக்‌ கலந்தாய்வில்‌ கலந்துகொள்ள இயலாத மாணவர்களும்‌ https://www.tneaonline.org அல்லது https://www.dte.tn.gov.in என்ற இணையதளம்‌ மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்‌.

இணையதளம்‌ மூலம் விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள்‌, தங்களின்‌ விண்ணப்பத்தை தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பொறியியல்‌ சேர்க்கை சேவை மையங்களில் கொடுக்க வேண்டும். அதன்‌ விவரங்கள்‌ மேற்காணும்‌ இணையதளத்தில்‌ கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் பதிவு செய்வதற்காக OC/ BC/ BCM/ MBC & DNC பிரிவினருக்கு ரூ.500யும், எஸ்சி/ எஸ்சிஏ/ எஸ்டி பிரிவினருக்கு ரூ.250 மாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக் கட்டணத்தை கிரெடிட், டெபிட் கார்ட், இணைய வழி, வங்கிக் கணக்கு வழியாக செலுத்த வேண்டும்‌. 

அந்த வகையில், மாணவர்கள் இணையதளம்‌ மூலம்‌ விண்ணப்பப்‌ பதிவு செய்வதற்கு இன்று கடைசி நாள். மாணவர்கள்‌ இணையதளம்‌ மூலம் தங்களுடைய விண்ணப்பத்தை பதிவு செய்யும்‌பொழுதே அசல்‌ சான்றிதழ்களைப் பதிவேற்றம்‌ செய்ய வேண்டும்‌. 

தங்களுக்கு விருப்பமான தமிழ்நாடு பொறியியல்‌ சேர்க்கை உதவி மையத்தை தேர்வு செய்துகொள்ள வேண்டும்‌. மேலும்‌ விவரங்களைப் பெற 1600-425-0110 என்ற என்னுக்குத் தொடர்புக்கு கொள்ளலாம். மேலும், https://suppl.tneaonline.org/ என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today last date of apply engineering supplymentary counselling


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->