கிருஷ்ணகிரி இளைஞர்களே ரெடியா.! இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம்.! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும், 3ஆம் வெள்ளிக்கிழமை அன்று சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

அதன்படி, இந்த மாதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி அளவில் கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், நடைபெற உள்ளது.

இந்த முகாமில் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரை சேர்ந்த தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்கள் நிறுவனத்திற்கு தகுதி உள்ள வேலைதேடுபவர்களை தேர்வு செய்ய உள்ளனர். 

கல்வி தகுதி:

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2, ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் தங்களுடைய சுய விவரத்துடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

மேலும் இது ஒரு இலவச பணியே ஆகும். இதனால் தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today may 19 private employment camp in kirishnagiri


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->