அமைச்சர் செந்தில் பாலாஜி கைது எதிரொலி - பாஜகவைக் கண்டித்து கோவையில் கண்டன பொதுக்கூட்டம்.!! - Seithipunal
Seithipunal


அமைச்சர் செந்தில் பாலாஜி கைது எதிரொலி - பாஜகவைக் கண்டித்து கோவையில் கண்டன பொதுக்கூட்டம்.!!

தமிழகத்தின் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்தும் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கோவையில் இன்று கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. 

இந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகிறார். மேலும், இந்தக் கூட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்களான காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொள்கிறார்.

அவர்களோடு, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்தி கம்யூனிஸ்டு செயலாளர் ஆர்.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர்மொ கதீன், வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து கண்டன உரையாற்ற உள்ளனர். 

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள கோவை மாவட்டம் முழுவதிலும் இருந்து தி.மு.க. மற்றும் காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என்று அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தை முன்னிட்டு அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today public meeting in coimbatore for minister senthil balaji arrest


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->