இன்று விசாரணைக்கு வருகிறது செந்தில் பாலாஜி மனு.! - Seithipunal
Seithipunal


போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14-ந்தேதி கைது செய்தபட்டார். 

இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் ராம் சங்கர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஒகா, ஏ.ஜி. மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

அதன் படி நேற்று நடந்த விசாரணையின்போது, 'ரூ.67.74 கோடி பண மோசடி புகாருக்கான ஆதாரமாக கூறப்படும் ஆவணம் கைப்பற்றப்பட்ட பென் டிரைவில் இல்லை என்பது செந்தில் பாலாஜியின் வாதமாக உள்ளது. இந்த ஆவணம் எப்படி அமலாக்கத்துறைக்கு கிடைத்தது?' என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அந்த ஆவணத்தை அமலாக்கத்துறை கைப்பற்றவில்லை. மத்திய குற்றப்பிரிவு கைப்பற்றி உள்ளது. பண மோசடி புகாருக்கான ஆதாரமாக கூறப்படும் ஆவணம் கைப்பற்றப்பட்ட பென்டிரைவில் இருந்தது. 

அதாவது, போக்குவரத்துத்துறையில் நடத்துனர், என்ஜினீயர் உள்ளிட்ட வேலைகளை ரூ.1.5 லட்சம் தொடங்கி ரூ.8 லட்சம் வரை லஞ்சம் பெற்று விற்றதும், இதனால் செந்தில் பாலாஜிக்கு மொத்தம் ரூ.67.2 கோடி கிடைத்துள்ளது என்று மத்திய குற்றப்பிரிவு கைப்பற்றிய பென் டிரைவில் தெளிவாக உள்ளது.

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாக லஞ்சம் பெற்ற காலக்கட்டத்தில் செந்தில் பாலாஜியின் வருமானம் அதிகரித்துள்ளது. 2016-2017 காலக்கட்டத்தில் வங்கியில் லட்சக்கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட ரொக்கத்திற்கு பான் எண்ணும், முகவரியும் இல்லை' என்று தெரிவித்துள்ளார். இந்த வாதங்களைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், அமலாக்கத் துறையி்ன் வாதங்களை தொடரும் விசாரணையை இன்று பிற்பகல் 3 மணிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today senthil balaji case hearing


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->