தஞ்சை பெரியகோவிலில் கோலாகலமாகத் தொடங்கிய சித்திரை தேரோட்டம்.! - Seithipunal
Seithipunal


தஞ்சை பெரியகோவிலில் கோலாகலமாகத் தொடங்கிய சித்திரை தேரோட்டம்.!

உலக பாரம்பரிய சின்னங்களுள் ஒன்றாக கருதப்படுவது தஞ்சை பெரியகோவில். மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்தக் கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் அழகுறக் காட்சி அளித்துக் கொண்டுள்ளது. இந்தக் கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மனுடன் சேர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பெரிய கோவிலில் ஒவ்வொரு வருடமும் சித்திரை திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில்  இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா கடந்த மாதம் 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.

பெருவுடையார் சாமி மற்றும் அம்மன் வீதிஉலா நான்கு ராஜவீதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தேரை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். 

இதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். இந்தத் தேர் திருவிழாவைக் காண்பதற்கு ஏராளமான பக்தர்கள் வருகைத தந்துள்ளனர். இந்தத் தேரில் தியாகராஜசாமியும், கமலாம்பாளும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today start thanjavur big temple therottam


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->