மாட்டு பொங்கல் தினம் - வண்டலூர் பூங்கா இன்று திறப்பு.!
today vandalur zoo open for mattu pongal
சென்னையை அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த விலங்குகளை காண்பதற்காக தினந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இந்தப் பூங்காவிற்கு வழக்கமாக செவ்வாய்க்கிழமை விடுமுறை தினமாகும். ஆனால், இன்று மாட்டுப்பொங்கல் தினம் என்பதால், பூங்காவுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் இருக்கும் என்று கருதப்படுகிறது.
இந்த நிலையில், இன்று வண்டலூர் உயிரியல் பூங்கா பொதுமக்கள் பார்வைக்காக திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்து இருந்தது. அதன்படி, இன்று வண்டலூர் உயிரியல் பூங்கா, சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக திறந்திருக்கும்.
English Summary
today vandalur zoo open for mattu pongal