பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது - எந்த மாவட்டத்தில் தெரியுமா? - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் சில மாவட்டங்களில் பள்ளிக்கு கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை ஈடு செய்யும் பொருட்டு சனிக்கிழமைகளில் வேலை நாளாக அறிவிக்க வேண்டும் என்றி பள்ளிக்கு கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் இன்று வழக்கம் போன்று செயல்படும். இன்றைய தினம் முழு வேலை நாளாக கடைபிடிக்கப்படும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு நிதி உதவி பெறும் மாநகராட்சி, தனியார் சுயநிதி, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் இன்று செயல்படும். முழு வேலை நாளாக கடைபிடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today working day in tirupur districts school


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->