தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு - இன்று வீரர்களுக்கான டோக்கன் விநியோகம்.! - Seithipunal
Seithipunal


பொங்கல் பண்டிகை என்றால் அனைவரின் நினைவிற்கு வருவது ஜல்லிக்கட்டு. அதன் படி இந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் பத்து நாட்களே உள்ளதால் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாடுகள் சூடு பிடித்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜனவரி 1-ம் தேதி அந்தோணியார் தேவாலய புத்தாண்டு விழாவை முன்னிட்டு நடைபெறுவது வழக்கம்.

ஆனால் சில காரணங்களால் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது தாமதமானது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டை நடத்தும் பொருட்டு வாடிவாசல், பேரிகார்டு அமைப்பது உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

அதன் படி வருகிற 6-ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள்ளதையொட்டி, போட்டியில் கலந்து கொள்ளும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு இன்று ஆன்லைன் மூலம் டோக்கன் வழங்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

token provide to competitors for jallikattu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->