இல்லத்தரசிகளுக்கு ஷாக்... கிடுகிடுவென உயர்ந்த தக்காளி விலை! கிலோ எவ்வளவு தெரியுமா?
Tomato price increase
சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் 500க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது.
வட மாநிலங்களில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக தக்காளிக்கு அதிக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வெளி மாநில வியாபாரிகள் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் அதிக அளவில் தக்காளியை கொள்முதல் செய்து வருகின்றதால் தக்காளியின் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.
மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ. 60க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் காய்கறி மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ தக்காளி ரூ. 70 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதே போல் கலந்த மாதம் தொடர் உச்சத்தில் இருந்து வந்த பீன்ஸ் விலை சற்று குறைந்து ஒரு கிலோ ரூ. 50க்கும் கேரட் ,அவரைக்காய், முருங்கை ஆகிய காய்கறிகள் ஒரு கிலோ ரூ. 60க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி கோயம்பேடு மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் ரூ. 60க்கும் உருளைக்கிழங்கு ஒரு கிலோ ரூ. 34 , கத்தரிக்காய் ரூ. 50, வெண்டைக்காய் ரூ. 15, முருங்கைக்காய் ரூ. 60, பீட்ரூட் ரூ. 25, முள்ளங்கி ரூ. 30, வெள்ளரிக்காய் ரூ. 30, முட்டைக்கோஸ் ரூ. 20, சுரக்காய் ரூ. 8 என விற்பனை செய்யப்படுகிறது.