நாளை முதல் உங்க ஊரிலும்.. மலிவு விலையில் தக்காளி விற்பனை.! வெளியான சூப்பர் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் மழையின் காரணமாக தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இன்று சில்லறை விற்பனையில் தக்காளி ஒரு கிலோ 200 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தலைமையில் தமிழக முழுவதும் நியாய விலை கடை மூலம் தக்காளி விற்பனை செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அவர் "ஏற்கனவே ஒரு சில நியாய விலை கடைகளில் தக்காளி குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனை மேலும் விரிவுபடுத்துமாறு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார். அதன்படி ஏற்கனவே தமிழக முழுவதும் 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் மூன்றாம் கட்டமாக கூடுதலாக குறைந்தது 200 நியாய விலை கடைகளுக்கு கிலோ ரூ.60 என்ற விலையில் தக்காளி விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சராசரியாக குறைந்தது 10 முதல் 15 கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த முறை நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் போது பத்து நாட்களுக்குள் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விளைச்சல் மற்றும் வரத்து குறைவால் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மேலும் 500 கடைகளுக்கு விரிவுபடுத்த முதலமைச்சர் உத்தரவிட்டதன் அடிப்படையில் நாளை முதல் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படவுள்ளது என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tomatoes sale in 500 ration shops from tomorrow


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->