குழந்தைகளை குறி வைக்கும் தக்காளி காய்ச்சல் - மக்களே உஷார்.!!
tomatto fever spread in tamilnadu
கோடை காலங்களில் அதிகளவில் குழந்தைகளை குறி வைத்து தக்காளி காய்ச்சல் பாதிக்கப்படுகிறது. உடலில் சிவப்பு நிறத்தில் தக்காளி போல் சிறிய கொப்புளங்கள் தோன்றுவதால் இந்த பாதிப்பை தக்காளி காய்ச்சல் என்று அழைக்கின்றனர்.
இது குறித்து குழந்தை மருத்துவர் ஒருவர் தெரிவித்ததாவது:- "கை, கால் மற்றும் வாய் நோயால், குழந்தைகளுக்கு தோல் வெடிப்பு மற்றும் எரிச்சல், அதிக காய்ச்சல் மற்றும் சிலருக்கு மூட்டு வலி, உடல் வலி, கடுமையான நீரிழப்பு, சோர்வு, வாந்தி, வயிற்று போக்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். ஆனால், இந்த காய்ச்சல் ஒரு வாரத்தில் தானாகவே சரி ஆகிவிடும்.
இந்தக் காய்ச்சலால் பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. கை, கால் மற்றும் வாய் நோய் சுகாதாரமற்ற முறையில் இருப்பதால் ஏற்படுகிறது. பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகள், நண்பர்களுடன் விளையாடி விட்டு வீட்டிற்கு வரும்போதும் அவர்கள் கை, கால், முகம் ஆகியவற்றை சுத்தமாக வைத்திருப்பதை பெற்றோர் உறுதிப்படுத்த வேண்டும். இதன் மூலம் இந்த காய்ச்சலை தவிர்க்க முடியும்" என்றுத் தெரிவித்தார்.
English Summary
tomatto fever spread in tamilnadu