#BREAKING : நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு.!
Tomorrow Anna University exams postponed
வங்கக்கடலில் தீவிரப் புயலாக உருவான 'மாண்டஸ்' தற்போது புயலாக வலுவிழந்து, சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 180 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தற்போது மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் புயல், மாமல்லபுரத்தில் இன்று இரவு 11:30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை இந்த புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நாளையும் தமிழகத்தில் கன முதல் மிக கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாண்டஸ் புயல் எதிரொலியாக நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பட்டுள்ளது. மண்டாஸ் புயல் காரணமாக பல மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் தேதி குறிப்பிடாமல் தேர்வு ஒத்திவைப்பட்டுள்ளதாகவும் தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
English Summary
Tomorrow Anna University exams postponed