இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க.. நாமக்கல் நாளை (27.02.2023) மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தபடாமல் இருந்தது. அதன் காரணமாக, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வந்தனர்.

இதனையடுத்து தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் 2 முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான ஊழியர்களை தேர்வு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள புதுச்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8 ஆம் வகுப்பு முதல் ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை கலந்துகொள்ளலாம். இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார்த் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tomorrow mega employment camp in namakkal


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->