அலர்ட்.!! நாளை 5 மாவட்டங்களின் முக்கிய பகுதிகளில் மின்தடை.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 5 மாவட்டங்களில் முக்கிய இடங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின்தடை செய்யப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,

புதுக்கோட்டை மாவட்டம்:

அம்பாசமுத்திரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளதால் குளத்தூர், இளையாவயல், நாஞ்சூர், கிருஷ்ணாவாரப்பட்டி, சத்தியமங்கலம், முத்துக்காடு, காவிரி நகர், திருமலைராயபுரம், உப்பிலியகுடி, விளத்துப்பட்டி, ஒடுக்கூர், நாரதமலை, ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

அதேபோன்று வடகப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக வேலூர், கத்தனூர், குளவாய்பட்டி, முல்லையூர், புதுப்பட்டி, நாயக்கன்பட்டி, சூரியூர், மதயானைப்பட்டி, திருநள்ளூர், சாத்திவையல், பெரம்பூர், கல்லுப்பட்டி, மலம்பட்டி, ஆலங்குடி, சீதப்பட்டி, சிதம்பூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட்ட உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம்:

தஞ்சாவூர் வீரமரசன்பேட்டை துணை மின் நிலையம்மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக பூதலூர், செல்லப்பன்பேட்டை, மதக்குடி, புதுப்பட்டி, ஆவாரம்பட்டி ,முத்து வீரக்கண்டியன்பட்டி, நந்தவனப்பட்டி, அயனாபுரம், சோளக்கம்பட்டி, ஒரத்தூர், பூதராயநல்லூர், சாமிநாதபுரம், சிவசாமிபுரம், விண்ணமங்கலம், அடஞ்சூர், மாதுரன்புதுக்கோட்டை, முல்லைகுடி, தீட்சைசமுத்திரம், தொண்டராயன்பட்டி, ஆற்காடு, சித்திரக்குடி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்பட உள்ளது.

மதுரை மாவட்டம்:

மதுரை வடக்கு மாவட்ட மின்வாரிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பொத்தேரி துணை மின் நிலையத்தின் பராமரிப்பு பணி காரணமாக மீனாட்சிபுரம், சுப்பிரமணியபுரம், இடையப்பட்டி, நாட்டார்மங்கலம், செங்கோட்டை, தச்சனேந்தல், இஸ்லாணி, மீனாட்சிபுரம், செவல்பட்டி, இளையூர், கீழவளவு, சொக்கம்பட்டி, தனியாமங்கலம், வெள்ளநாயக்கன்பட்டி, குறிஞ்சிப்பட்டி, வெள்ளலூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்பட உள்ளது.

தேனி மாவட்டம்:

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக கம்பம், கூடலூர், உத்தமபுரம், ஊத்துக்காடு, காமயகவுண்டன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் பராமரிப்பு பணி காரணமாக நிறுத்தப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டம்:

திண்டுக்கல் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக பென்னாகரம், நல்லாம்பட்டி, ரெட்டியபட்டி, வாழைக்காய்பட்டி, சிறுமலை அடிவாரம், நரசிம்மபுரம், தோமையார்புரம், மேட்டுப்பட்டி, தொழில்பேட்டை, என்ஜி.ஓ காலனி, தோட்டனூத்து, ஆர்.எம்.டி.சி காலனி, அடியனூத்து, நல்லமநாயக்கன்பட்டி, உத்தனம்பட்டி, காப்பிளியப்பட்டி, நாகல்புதூர், பாரதிபுரம், ரயில் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும், இல்லத்தரசிகளும் தேவையான பணிகளை முன்கூட்டியே செய்து கொள்ளுமாறு தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tomorrow Power outage in major areas of 5 districts in TamilNadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->