இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு.!
Toolgate price amount increase from tomorrow
நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பொதுமக்கள் வாகனங்களில் பயணிப்பதற்காக குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு அதனை வசூலிப்பதற்காக சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் இந்தியா முழுவதும் உள்ள 800-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் சுமார் 600 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சுங்கச்சாவடிளுக்கு கட்டணத்தை ஆண்டுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை 5 முதல் 10 சதவீதம் உயர்த்துவதாக தேசிய நெடுஞ்சாலைகள் திட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. அதன்படி நாளை முதல் இந்தியாவில் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது.
அதிலும், குறிப்பாக தமிழகத்தில் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் 29 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. அதன்படி, காருக்கு ரூ.60லிருந்து ரூ.70ஆகவும், இலகுரக வாகனத்துக்கு ரூ.105லிருந்து ரூ.115ஆகவும், லாரி மற்றும் பேருந்துகளுக்கு ரூ.205லிருந்து ரூ.240ஆகவும் கட்டணம் நிர்ணயம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பால், பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Toolgate price amount increase from tomorrow