10 நாட்களில் சுற்றுப்பயணம் - சசிகலா அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக கட்சிகள் பல்வேறு பிரிவுகளாக பிரிந்தது. இதனால், மோதல் போக்குகளும் ஏற்பட்ட வண்ணம் இருந்தது. இந்த சூழ்நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவை உள்பட நாற்பது தொகுதிகளிலும் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தோல்வியைச் சந்தித்தது. 

இதையடுத்து அதிமுகவை ஒன்றிணைப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், ”அதிமுக கட்சியை ஒருங்கிணைக்கும் பணி 90% நிறைவு பெற்றது. இன்னும் பத்து நாட்களில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன்” என்று சசிகலா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்ததாவது, ”ஜெயலலிதா ஆட்சியின் போது, ஒரு பெண் முதல்வர் என்பதால் அரசியல் கட்சியினர் பலரும் விமர்சனம் செய்தனர்.

கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதே போன்று அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நிகழ்ந்த போது, ஜெயலலிதா எடுத்த நடவடிக்கையால் அதன் பிறகு விஷ சாராய மரணங்கள் நிகழவில்லை.

ஆனால், தி.மு.க. ஆட்சியில் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. காவல் துறையை இயக்குவோர் சரியாக இல்லை. இது போன்ற அரசாங்கம் தமிழகத்தில் இதுவரை இருந்ததில்லை. இப்போது இருக்கிறது. இதை திராவிட மாடல் ஆட்சி என்றும் கூறிக்கொண்டு இருக்கிறார்கள். 

தற்போது, ஜெயலலிதா படம் பலருக்கும் தேவைப்படுகிறது. அதற்கு அவர் ஆற்றிய பணிகளே காரணம். அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணி 90% நிறைவு பெற்றது.

இன்னும் 10 நாட்களில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். சுற்றுப்பயணம் எல்லாருக்கும் தெரிகிற மாதிரி தான் போக போறேன். அப்பொழுது நீங்கள் பார்த்து தெரிந்துகொள்ளலாம். தமிழக போலீசார் சரியாக செயல்படுவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tour across to tamilnadu sasikala announce


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->