விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி! ஆனால்... - கட்டுப்பாடுகள் விதித்த போலீசார்.! - Seithipunal
Seithipunal



கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள விவகானந்தர் மண்டபத்தில் பிரதம நரேந்திர மோடி இன்று முதல் மூன்று நாட்கள் தியானம் செய்ய உள்ளார். இதனை தொடர்ந்து கன்னியாகுமரி முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். 

இதற்கு இடையே கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் படகுமூலம் விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்லக்கூடாது என தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் தமிழக போலீசாரிடம் சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் இருந்து விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல வழக்கம் போல் அனுமதி தாருங்கள் என தெரிவித்துள்ளனர். 

அதே சமயத்தில் பிரதமர் மோடி தியானம் செய்யும் தியான மண்டபத்திற்குள் அல்லது அதன் அருகே உள்ள புத்தக நிலையம், விவேகானந்தர் மண்டப பொறுப்பாளர் அலுவலகம் போன்றவற்றிற்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளனர். 

எனவே பிரதமர் நரேந்திர மோடி தியானம் செய்யும் மூன்று நாட்களுக்கு சுற்றுலா பயணிகள் படகுமூலம் விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்று வர எந்த தடையும் கிடையாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு தளத்தில் எட்டு இடங்களில் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அவர்களுக்கு கட்டாயம் ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டை தேவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் விவேகானந்தர் பாறைக்கு சுற்றுலா பயணிகள் செல்லும் போது பைகள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tourists allowed visit Vivekananda Mandapam


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->