கன்னியாகுமரி : கடற்கரைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை..! - Seithipunal
Seithipunal



கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றும் (ஜூன் 10), நாளையும் (ஜூன் 11) கடல்களில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்று தேசிய பெருங்கடல் சேவை மையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

கடலில் திடீரெனெ வேகமாக பலத்த காற்று வீசுவதுடன், கடலோர பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும், இதனால் மீனவர்கள் மற்றும் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.

எந்த வித அறிகுறிகளும், சத்தமும்  இல்லாமல் திடீரென கடல் கொந்தளித்து கரையோரம் பாதிப்பை ஏற்படுத்துவதை கள்ளக் கடல் சீற்றம் என்று கூறுவார்கள். அப்போது 0.5 மீ முதல் 1.8 மீ உயரம் வரை கடல் அலைகள் எழும் என்றும் கூறப்படுகிறது. 

மேலும் இந்த கள்ளக் கடல் சீற்றமானது எங்கோ தொலை தூரத்தில் ஏற்படும் சூறாவளியினால் உண்டாகும் அலைகள் மிகுந்த வேகத்துடன் கரையை நோக்கி செல்லும் என்றும் கூறப்படுகிறது.

தற்போது கன்னியாகுமரி பகுதியில் நிகழ்வதை கள்ளக் கடல் சீற்றம் என்று ஆய்வாளர்கள் கூவுகிறார்கள். எனவே தான் கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகள் இன்றும், நாளையும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளனர். 

இஹடையடுத்து கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகமும் மீனவர்களையும், கடலோர பகுதி மக்களையும் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு எச்சரித்துள்ளது. மேலும் சுற்றலா பயணிகளையும் இரண்டு நாட்களுக்கு கன்னியாகுமரி கடற்கரைக்கு செல்வதற்கு தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tourists Are Prohibited to Visit Sea Shores in Kanniyakumari


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->