விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் திடீர் வெளியேற்றம்! ஏமாற்றத்தில் மக்கள்.! - Seithipunal
Seithipunal


விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டதால் சுற்றுலா பயணிகள் இடையே ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு தியானத்திற்காக டெல்லியில் இருந்து நேற்று கன்னியாகுமரி சென்றுள்ளார். 

அங்குள்ள விவேகானந்தர் தியான மண்டபத்தின் ஜூன் 1ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை தியானத்தில் இருக்க உள்ளார். இருப்பினும் விவேகானந்தர் மண்டபத்திற்குள் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டது.

மீண்டும் படகு போக்குவரத்து தொடங்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பிரதமர் நரேந்திர மோடி தியானம் செய்யவிருக்கும் விவேகானந்தர் மண்டப மைய பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. 

இந்நிலையில் கன்னியாகுமரியில் இன்று திடீரென சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விவேகானந்தர் மண்டபத்திற்குள் சென்ற சுற்றுலா பயணிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tourists evacuated Vivekananda Mandapam


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->