குற்றாலத்தில் குளு குளு சீசன்.. படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்.. களை கட்டிய அருவிகள்..!! - Seithipunal
Seithipunal



கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்திலும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள தென்காசி மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக சாரல் மழை பெய்து கொண்டு உள்ளது.

இதையடுத்து தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்திலும் குளு குளு சீசன் ஆரம்பித்துள்ளது. தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் நிலவும் குளிர்ச்சியான சூழ்நிலை மற்றும் சாரல் மழையினால் குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதையடுத்து குற்றாலத்தில் ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி, மெயின் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. இதனால் தற்போது குற்றாலத்தில் சீசன் களை கட்டி உள்ளது. 

மேலும் இன்று வார விடுமுறை தினம் என்பதால் இன்று காலை முதல் அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் கூட்டம், கூட்டமாக வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். அதிக வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருவதால் அங்கு போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

மேலும் அருவியில் போலீசார் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியிலும், பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கேரளாவில் தென்மேற்குப் பருவமழை மேலும் தீவிரமடையும் பொழுது குற்றால அருவிகளில் நீர் வரத்து மேலும் அதிகரிக்கும். 

குற்றாலத்தில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தான் சீசன் களை கட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tourists Spotted in Courtalam Falls For Holidays


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->